கோட்டா வெளியேற்றம்; ரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுதலை!

0
531

சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்யுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

பதில் ஜனாதிபதி, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதில் ஜனாதிபதியை சந்தித்து ரஞ்சனின் பொது மன்னிப்புக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய, உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு பதில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கோட்டா நாட்டைவிட்டு வெளியேற்றம்;  ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விரைவில் விடுதலை! | Ranjan Ramanayake Will Be Released Soon