புதிய ஜனாதிபதி தெரிவு செயன்முறையை சற்றும் தாமதிக்க வேண்டாம்

0
143

புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் செயன்முறையை சற்றும் தாமதிக்கவேண்டாமென அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களிடமும் சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது,

அத்துடன் இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக இடம்பெறவிருக்கும் முக்கியமான அதிகாரப் பரிமாற்றத்தைப் பாதிக்கும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடவேண்டாமென பொதுமக்களிடம் சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், செயலாளர் இசுரு பாலபட்டபெந்தி ஆகியோர் கையெழுத்திட்டு விடுத்த அறிக்கையில் இவ்வாறு கோரப்பட்டுள்ளது. அரச வளாகங்களிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறியுள்ளதை தான் வரவேற்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.