100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடமாற்றிய சீனா

0
561

கிழக்கு சீனாவில் இருக்கும் ஷாங்காய் நகரம் அந்நாட்டில் பொருளாதார தலைநகரமாக திகழ்ந்து வருகிறது.

இந்த நகரத்தில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. 3,800 தொன் எடை கொண்ட இந்த கட்டிடத்தை இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்த நிர்வாகம் இதற்காக நகர்த்தும் (நடக்கும்) இயந்திரம் ஒன்றை கொண்டு வந்தது. பின்னர் துல்லிய அளவீடுகள் மூலம் கட்டிடம் அளவிடப்பட்டு கட்டிடத்தைத் தள்ளுவதற்காக கட்டிடத்தின் அடியில் நெகிழ்வான பெரும் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன.

பின்னர் நகர்த்தும் இயந்திரத்தை அதன் கீழே பொருத்தப்பட்டது. இந்த இயந்திரத்தில் மனிதனை போன்ற கால்கள் அமைப்பு இடம்பெற்றுள்ளது.

மேலும். இரண்டு பிரிவுகளாக பிரிந்து தூக்கவும் கீழிறக்கவும் செய்யும். இந்த இயந்திரம் மூலம் 3,800 தொன் எடை கொண்ட இந்த கட்டிடம் இடமாற்றப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இதேபோன்று கட்டிடங்களை நகர்த்தும் தொழில்நுட்பம் இருந்தாலும் சீனாவின் இந்த சாதனை உலக அளவில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

இந்த 3,800 தொன் எடை கொண்ட கட்டிடத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் நகர்த்திய பொறியியலார்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளளார்.