நீர்தேக்கத்தில் தத்தளித்த நபர் சடலமாக மீட்பு

0
182

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து நேற்று (15) ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.

மேற்படி நபர் நீர்தேக்கத்தில் தத்தளித்த படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேளையில் காப்பாற்றுவதற்காக பிரதேச மக்கள், பொலிஸார், விசேட அதிரடி படையினர், இளைஞர்கள் என பலரும் முயற்சித்த போதிலும் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அவர் நீருக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நிலையிலேயே அவரின் சடலம் மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வட்டகொடை மடக்கும்புர தெற்கு பகுதியை சேர்ந்த சுப்பையா சுப்பிரமணியம் வயது 61 இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துக் கொண்டு வந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்துள்ளாரா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.