நேற்று வாங்கிய சிலிண்டர் இன்று வெடித்தது!

0
275

கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.

குறித்த வீட்டார் நேற்று தான் சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்கி வந்துள்ளனர். அதனை பயன்படுத்தி இன்று சமைக்க முற்பட்டவேளையிலேயே இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பில் உரிய தரப்புகளுக்கு முறையிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று வாங்கிய சிலிண்டர் இன்று வெடிப்பு! | The Cylinder Bought Yesterday Exploded Today