இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் – உக்ரைன் ஜனாதிபதி

0
139

இலங்கையில் தற்பொழுது நிலவி வரும் நெருக்கடி நிலைமைகளுக்கு ரஸ்யாவே காரணம் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த காரணத்தினால் உணவுப் பொருள் விநியோகத்திற்கு தடை ஏற்பட்டதாகவும் இதுவே இலங்கையில் இன்று பாரிய நெருக்கடி நிலைமை உருவாக காரணம் எனவம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பொருளாதார அதிர்ச்சியை ஏற்படுத்தும் தந்திரோபாயத்தை ரஸ்யா பிரயோகித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தினால் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினை ஒட்டுமொத்த நாடுகளையும் பாதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிர்ச்சிகரமான அடிப்படையில் உணவு மற்றம் எரிபொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் அங்கு சமூக புரட்சி வெடித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விதமான சமூகப் புரட்சிகள் வேறும் நாடுகளிலும் உணவு மற்றும் எரிபொருள் பிரச்சினைகளினால் உருவாகும் சாத்தியம் உண்டு என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.