பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தியானந்தா!

0
208

கடந்த சில மாதங்களாக சமூகவலைத்தளங்களில் கைலாசா நித்தியானந்தா சுவாமிகள் தொடர்பில் பல்வேறு மாறுபட்ட செய்திகள் பரவி வந்தன.

சமூக வலைதளத்தில் நித்தியானந்தா கோமா நிலைக்கு சென்றதாகவும் அவர் இறந்து விட்டதாகவும் நித்தி கைலாசாவை விட்டு வெளியேறியதாகவும் பல்வேறு செய்திகள் வெளியானது.

இதற்கு காரணம் கடந்த சித்திரை மாதத்திற்கு பிறகு நித்தியானந்தாவின் எந்தவொரு இணையவழி சத்தங்கங்கள் மற்றும் ஆராதனைகளில் பங்கெடுக்காமையே ஆகும்.

இந்த நிலையில் உலகெங்கும் உள்ள நித்தியானந்தாவின் பக்தர்கள் நித்தியானந்தாவுக்கு என்ன ஆச்சு என ஏங்கி நின்றனர்.

அதேவேளை நித்தி தொடர்பில் கைலாசாவிலிருந்து உத்தியோகபூர்வமான செய்திகள் எவையும் வெளியாகாத நிலையில் பக்தர்கள் கவலையுடன் காணப்பட்டனர்.

இந்த நிலையில் தன் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு நீண்ட நாட்களின் பின் சற்றுமுன் நித்தியானந்தா தனது ஆன்மீக சத்சங்கத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சத்சங்கமானது கைலாசா தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.