இணையத்தில் வைரலாகும் கோட்டாவின் ராஜினாமா கடிதம்!

0
232

கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் என கூறப்படும் ஆவணமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனினும் கோட்டாபயவின் கையெழுத்திடப்படாத கடிதமொன்றே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது.

குறித்த பதவி விலகல் கடிதத்தில் நேற்றைய தினத்திற்கான திகதி இடப்பட்டுள்ளது. அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவிதிருந்தார்.

புதன்கிழமை அதாவது நேற்றைய தினம் நள்ளிரவிற்கு முன்னர் தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தொலைபேசியூடாக தனக்கு அறிவித்திருந்ததாக சபாநாயகர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இந்த கடிதம் தொடர்பாகவோ அல்லது கோட்டாபயவின் பதவில் விலகல் தொடர்பாகவோ சபாநாயகர் இன்றைய தினம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் குறித்த கடிதம் போலியானதாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. 

Gallery