நாடாளுமன்றம் கைப்பற்றினால் ராணுவ ஆட்சிக்கு வாய்ப்பு!

0
464

நாடாளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினால் அது இராணுவ ஆட்சியில் தான் சென்று முடியும் கூறியுள்ள அரசியல் அவதானிகள் காலம் காலமாக உலக வரலாறுகள்  இதனை எமக்கு உணர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  

அந்தவகையில் அமெரிக்க புரட்சி, ரஸ்ய புரட்சி, பாக்கிஸ்தான் புரட்சிகள் என்பவவை நமக்கு கற்றுத்தரும் பாடம் நாடாளுமன்றம் போராட்டக்காரர்கள் வசம் செல்லுமானால் இராணுவம் அந் நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் தலையிடும் என்பதாகும்.

இந்நிலையில் இலங்கை  ஐனாதிபதி, பிரதமர் மாளிகைகள் போராட்டக்காரர்களின் வசம் சென்றுவிட்டதால் நாடாளுமன்றமும் போராட்டக்காரர்களிடம் சென்றால் நிதி கையாளும் அதிகாரம் யாரிடமும் இல்லை.  

இப்போது ஆர்ப்பாட்டகாரகளிடம்  நாடாளுமன்றத்தையும் பறிகொடுத்து விட்டால் அரச ஊழியர்களிற்கு இராணுவத்திற்கு  பொலிசாரிற்கு சம்பளம் கிடைக்காது. அதுமட்டுமல்லாது அரசால் நிர்வகிக்கப்படும் உயிர் காக்கும் மருத்துவமனைகளிற்கான மருந்து பொருட்கள் கூட கிடைக்காது.

அதோடு மருத்துவர்கள், தாதியர்கள், உயிர்காக்கும் ஊழியர்கள் ஊதியம் கிடைக்காது. வங்கி கட்டமைப்பு சீர்குலையும். மக்கள் யாவரும் ஓரே நாளில் தங்கள் வைப்புகள் யாவற்றையும் எடுக்க வங்கிக்கு செல்வார்கள். அப்படி நடந்தால் ஒரு நாளிலேயே வங்கி கட்டமைப்பு கவிழும் என்பது நிதர்சனம்.

ஏற்னவே நாட்டில் 13 பேரிற்கு ஒருவர் என வீங்கி பருந்துவிட்ட அரச உத்தியோகத்தர்கள் யாவரும் ஓரே நாளில் ஆண்டியாவார்கள். எனவே இவற்றினை போராட்டக்காரர்கள் உணர்ந்து  நாடாளுமன்றத்தை கைப்பற்றாது நாடாளுமன்றம் சீராக நடைபெற ஒத்துளைப்பு வழங்க வேண்டும் எனவும் அவதானிகள் கோரியுள்ளனர்.

அதே நேரம் நாடாளுமன்றத்திற்கு சென்று இலவசமாக கிடைக்கும் உயர்தர உணவை உண்டு. நாடாளுமன்ற கதிரைகளில் கொறட்டை விட்டு தூங்கும் கேடு கெட்ட மனிதர்களை நாடாளுமன்றத்திற்கு வெளியே சூழ்ந்து நின்று வழிப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனெனில் இந்த 225 பேரும் செய்யவேண்டிய வேலைகளை உரிய நேரத்தில் செய்தால் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற பக்கம் வந்திருக்கமாட்டார்கள்.

1-பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை உடனடியாக கொண்டுவந்து பிரதமரை பதவி நீஙக்கலாம்.

2- சபாநாயகர் ராஐபக்சாக்களை காப்பாற்றுகிறார் என்றால் அனைவரும் ஒத்து அவரை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் வெளியேற்றலாம்.

3- ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேராலும் இலகுவாக முடியும். அதை ஆர்ப்பாட்டகாரர்களை செய்ய கோரியது தான் தவறு. உண்மையில் தவறு 225 பேரினதும் தான்.

4- ஆர்ப்பாட்ட காரர்கள் நாடாளுமன்றத்தை சூழ்ந்து நின்று பாராளுமன்றத்திற்குள் புகாது நாடாளுமன்றத்தை கூட்டச்சொல்லி நாட்டிற்கு தேவையான அத்தனை தீர்மானங்களையும் சட்டவாக்கம் செய்யமுடியும்.

5- என்ன தீர்மானங்கள் நாட்டிற்கு தேவையோ அவற்றை சட்ட ரீதியாக நாடாளுமன்றின் அங்கிகாரத்தோடு இலகுவாக போராட்டக்காரர்களால் செய்யமுடியும் .

நாடாளுமன்றத்தை கைப்பற்றினால் இராணுவ ஆட்சிக்கு வாய்ப்பு! | A Chance For Military Rule If The Parliament

ஒத்துளைக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆர்ப்பாட்டகாரர்கள் ஐனநாயக முறையில் கவனிக்கலாம். மக்களை சரியாக வழிநடாத்த வேண்டும். அரசியல் அறிவு இல்லாத போராட்டங்கள் உலகில் எங்கேனும் வென்றதில்லை.

போராட்டம் இறுதி வெற்றி பெற பொறுமை தேவை. களயதார்த்தம் அறிந்து காய் நகர்த்த வேண்டும். இல்லையேல் படைகள் உங்கள் மீது எதிர்பாராத விதத்தில் பாயும்.

ஏற்கனே 1989 ஆண்டு 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்களிற்கு சமாதி கட்டியது வெளிநாட்டு இராணுவம் அல்ல எனவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.