நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமுல்! பரபரப்பில் இலங்கை

0
183

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க இலங்கை பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்போ​ரை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

அத்துடன் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வன்முறையை தூண்டும் வகையில் சட்டம் ஒழுங்கை மீறுவோரை கைதுசெய்ய படையினர் மற்றும் பொலிஸாருக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery