சீனாவில் ஒருவருக்கு கொரோனா; 3.2 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தலில்!

0
445

சீனாவின் ஒரு நகரத்தில் நபரொருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 3.2 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் வுகேங்க் என்ற நகரில் ஒரு நபருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வசிக்கும் அந்நகரத்திற்கு ஒட்டுமொத்தமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் பரவல் தடுப்பு நோக்கில் அந்நகரத்தை சேர்ந்த யாரும் வரும் வியாழக்கிழமை மதியம் வரை வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மிகப் பெரிய உருக்கு ஆலை இந்த வுகேங்க் நகரில் தான் உள்ளது என்பதால் உருக்கு ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் பல்வேறு நகரங்களில் இது போன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

அந்நாட்டின் நாளாந்தம் கொரோனா பாதிப்பு 300இல் இருந்து 400 ஆக உள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக சுமார் 25 கோடி மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அனுபவித்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் முன்னணி தொழில் நகரமான ஷாங்காய் இந்த வருட தொடக்கத்தில் இரு மாத ஊரடங்கில் இருந்தது.

பாதிப்பு குறைந்ததும் மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியதால் ஷாங்காய்வாசிகள் ஊரடங்கு அச்சத்தில் உள்ளனர்.