கோட்டா கோ கமவில் நடக்கவிருந்த தாக்குதல் முயற்சி!

0
360

கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்கப் போவதாக ஞாயிற்றுக்கிழமை (10-07-2022) சில வட்சப் பகிர்வுகள் பரவின.

அப்படி ஒன்றும் இல்லை என்றாலும் சூம் வழி இப்படியான தாக்குதல் ஒன்றுக்கு கப்பலில் இருந்து கொண்டு ராஜபக்ஷ தரப்பு பாதுகாப்பு தரப்போடு கலந்துரையாடியுள்ளது.

அதேநேரம் இந்த தகவலை பாதுகாப்பு தரப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கடத்தியுள்ளது. உடனடியாக வேகமாக செயல்பட்ட மனித உரிமை மற்றும் பல முக்கிய தரப்புகள் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டுள்ளன.

கோட்டா கோ கமவில் நடக்கவிருந்த தாக்குதல் முயற்சி! | An Attack Attempt To Take Place In Gota Go Gama

இதில் இராணுவதரப்பு கடைசிவரை இந்த சதிகார செயலை செய்ய மறுத்துள்ளது. அதேபோல ஒவ்வொருவராக பேசி இது வேறு பிரச்சனைகளை தோற்றுவிக்கும் என மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

இதில் ஒரு தரப்பு சொன்ன விடயம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. எங்களை செய்ய வைத்து விட்டு நீங்கள் ஓடிவிடுவீர்கள். நாங்கள் தான் பலிக்கடாவாக வேண்டும். அதோடு வெளிநாட்டுகளுக்கு போக வீசா கூட கிடைக்காது.

மனித உரிமை பிரச்சனை மட்டுமல்ல குடும்பங்களுக்கும் ஊரில் இருக்க கிடைக்காது என போட்ட போட்டோடு எல்லோரும் கப்சிப்பாகி நோ சொல்லியுள்ளனர்.

அதன் பின் தான் கோட்டா கம வளாகத்தை நோக்கி படையினர் நகர்வது போல சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பாதுகாப்பு அமைச்சு கடுமையாக மறுத்துள்ளது என ஒரு செய்தி வெளியானது.

கோட்டா கோ கமவில் நடக்கவிருந்த தாக்குதல் முயற்சி! | An Attack Attempt To Take Place In Gota Go Gama

ஆனாலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மிக விழிப்பாக இருந்தனர். மக்கள் குறையும் தருணம் பார்த்து தாக்குவதே வியூகம். ஆனால் மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ள ஜனாதிபதி மற்றும் அலரி மாளிகையில் மக்கள் நிறைந்தே இருக்கும் போது இது சாத்தியமில்லை.

எனவே மக்களை தொடர்ந்து வருமாறும் வந்து தங்குமாறும் அழைப்பு விடுத்தனர். அநேக மக்கள் அங்கேயே தங்கிவிட்டனர். பெற்ற வெற்றியை இழக்க மக்கள் தயாராக இல்லை.  

கோட்டா கோ கமவில் நடக்கவிருந்த தாக்குதல் முயற்சி! | An Attack Attempt To Take Place In Gota Go Gama

இப்படியான வழி முறையால் சென்ற முறை மகிந்த வந்தது போல திரும்ப வரலாம் என நினைத்திருக்கலாம். அதன் பின்னரே நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். சிலர் நீலிக் கண்ணீர் வடித்தாலும் பதவிக்காக வடிப்பதாக எண்ண வேண்டியுள்ளது.

இராணுவ முகாமில் இருப்பதாக கதை பரப்பி விட்டு கடந்த 9ம் திகதி 10 – 12 மணிவரை கோட்டாபய ஜனாதிபதி மாளிகையில் தான் இருந்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்குள் யாரும் வர மாட்டார்கள் என அனைவரும் நினைத்துள்ளார்கள். கடைசியில் கோட்டா கடற்படையினரோடு தான் தப்பி ஓடியுள்ளார்.

கோட்டா கோ கமவில் நடக்கவிருந்த தாக்குதல் முயற்சி! | An Attack Attempt To Take Place In Gota Go Gama

அவர் இராணுவத்தில் நம்பிக்கை இல்லாதவராக இருந்துள்ளார். அதன் பின் அவசர அவசரமாக கப்பலில் சிலரால் கொண்டு வந்து ஏற்றப்பட்டுள்ளது.  

இந்த உபத்திரங்கள் போய் மக்கள் நிம்மதியாக வாழ கிடைத்தால் பெற்றோல் – டீசலை விட மக்கள் மகிழ்வார்கள். அதைத்தான் ஜனாதிபதி மாளகைக்கு வந்து செல்லும் மக்களிடம் காண முடிகிறது.

தலைவர்களில்லா மக்கள் புரட்சி உலகம் இதுவரை காணத ஒன்று தான். என முகநூலி ஜீவன் பிரசாத் என்பவர் குறித்த கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.