31ஆம் திகதிக்குள் சமையல் எரிபொருள் வரிசையில் நிற்பது முடிவுக்கு வரும்!

0
544

சமையல் எரிவாயுவிற்காக வரிசையில் நிற்பது எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் முடிவுக்கு வரும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஒக்டோபர் மாதம் வரை போதியளவான கையிருப்பை பேணுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். எரிவாயுவை விநியோகம் செய்ய நேற்று (11) முதல் ஆரம்பித்துள்ளதோடு இன்று (12) காலை முதல் 120,000 சிலிண்டர்களை விநியோகிக்க உள்ளோம் என்றும் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

31ஆம் திகதிக்குள் எரிபொருள் வரிசையில் நிற்பது முடிவுக்குவரும்! | Queuing For Fuel Will Come To An End Old Peers

12.5 கிலோ சிலிண்டர்களுக்கான விலை அதிகரித்துள்ளதோடு ஜூலை மாத இறுதிக்குள் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவையம் ஒக்டோபர் மாத இறுதிக்குள் 100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவையும் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு கள்ளச்சந்தையில் எரிவாயுவை பொது மக்கள் கொள்வனவு செய்யக் கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதனோடு உள்ளக வங்கியுடன் கைச்சாத்திட்டுள்ளோம் அதனால் எதிர் காலத்தில் எரிவாயுவை வரிசையில் மக்கள் நிற்க வேண்டிய தேவை ஏற்படாது என முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.