விசேட அறிவித்தல் விடுத்த சட்டத்தரணிகள் சங்கம்!

0
303

விசேட அறிவித்தல் ஒன்றை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் (Saliya Pieris) விடுத்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலே அவர் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார்.

தனது தொழிலுக்கு அப்பாற்பட்டு அரசியல் பதவிகளை வகிக்கும் நம்பிக்கை தனக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாலிய பீரிஸ் முகநூலில் பதிவிட்ட கருத்து,

”கடந்த சில மாதங்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் சட்டத்தரணியும் நாட்டில் முக்கிய பங்கை வகிக்க முடிந்தது. இந்த இக்கட்டான தருணத்தில் அது தொடர வேண்டும்.

சங்கத்தின் தலைவர் பதவியை வகிப்பதற்கும் எனது தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நான் திருப்தி அடைகிறேன். நான் எந்த அரசியல் பதவியையும் வகிக்க விரும்பவில்லை என அதில் குறிப்பிட்டுள்ளார்.