பரபரப்பாகும் பாராளுமன்ற மூலமான ஜனாதிபதி தேர்வு 

0
173

அரசியலமைப்பின் 40 ஆம் உறுப்புரையில் பிரகாரம் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையானது 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தில் குறித்துரைக்கிறது. அரசியலமைப்பின் 38 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி பதவியானது ஜவறிதாயிருக்கும் பட்சத்தில் இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.

அவ்வாறு வறிதாகின்ற நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல் நடத்தும் அதிகாரியாகச் செயல்படுகிறார், மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டால், தேர்தல் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெறும். இறுதியாக, ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளரின் பெயர் மூன்று நாட்களுக்குள் வர்த்தமானியில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்படும்.