இன்று போராட்டக்காரர்களை சந்திக்கும் கட்சி தலைவர்கள்!

0
463

காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறுகிறது.

நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. இந்த கலந்துரையாடலில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரை அங்கத்துவப்படுத்தி 25 பேர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, எதிர்கால அரசியல் நடவடிக்கை மற்றும் அவை திட்டமிடப்பட வேண்டிய விதம் தொடர்பிலான கருத்துக்கள் மற்றும் யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அதன் பிரதிநிதியொருவர், நாட்டு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் தமது போராட்டத்தை வைத்து ஏதேனும் ஒரு கட்சி தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்களாயின் அதற்கு இடமளிக்க போவதில்லை என்று காலிமுகத்திடல் மக்கள் இயக்க பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை காலி முகத்திடல் போராட்டம் இன்று 95 வது நாளாகவும் தொடர்கிறது.