அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது – சுசில் பிரேமஜயந்த

0
615

சர்வக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு சகல அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றியை வேண்டும். சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அரசியல் கட்சிகளுக்கிடையில் இல்லை என்பது தெளிவாகுகிறது.

அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வகட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு இடமளித்து அமைச்சு பதவிகளில் இருந்து விலக தயார் என்பதை நேற்று முன்தினம் அறிவித்துள்ளோம். நாடு வரலாற்றில் என்றுமில்லாதவாறு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியினை தற்போது எதிர்கொண்டுள்ளது.

சர்வகட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு சகல அரசியல் கட்சிகளும் பொது கொள்கைக்கமைய இணக்கப்பாட்டுடன் ஒன்றினைய வேண்டும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறதே தவிர பொது கொள்கைக்கமைய செயற்படுவதில்லை.

சமூக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைகிறது. அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அரசியல் கட்சிகள் மத்தியில் இல்லை என்பது மாத்திரம் தெளிவாகுகிறது. நிறைவேற்றுத்துறையின் அதிகாரத்தை நாட்டு மக்கள் முழுமையாக கேள்விக்குள்ளாக்கியுள்ளார்கள்.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றின் ஊடாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது. பாராளுமன்றில் இடம்பெறும் வாதப்பிரதிவாதங்கள் மீது மக்க்ள கவனம் செலுத்துவதில்லை.பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் அரசியல் கட்சிகள் ஒருமித்த கொள்கையில் ஒரு தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தன்னிச்சையான முறையில் செயற்பட்டதன் விளைவை முழு நாடும் தற்போது எதிர்கொள்கிறது. மூன்றில்