எலான் மஸ்க்கு எதிராக வழக்கு தொடரும் ட்விட்டர்

0
451

உலகின் முதல்நிலை செல்வந்தர்களில் ஒருவரான எலன் மஸ்க் எதிராக உலகின் முதல் நிலை சமூக ஊடகங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர தீர்மானித்துள்ளது.

மஸ்கிக்கு எதிராக வழக்கு தொடர்வதற்காக தலைசிறந்த சட்ட நிறுவனம் ஒன்றை தெரிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுவிட்டர் நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி சட்ட நிறுவனங்களில் ஒன்றான Wachtell, Lipton, Rosen & Katz LLP நிறுவனத்தை அணுகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டது  போன்று 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிறுவனத்தை கொல்வனவு செய்யுமாறு வலியுறுத்தி இந்த வழக்கு தொடரப்பட உள்ளது.

எலான் மஸ்கிட்க்கு எதிராக வழக்கு தொடரும் ட்விட்டர் | Twitter Hires Law Firm Sue Elon Musk

ட்விட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் சில காலமாக நடைபெற்று வந்த போதிலும் இறுதி நேரத்தில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் மஸ்க் இந்த கொடுக்கல் வாங்கலை ரத்து செய்துவிட்டார்.

ட்விட்டர் நிறுவனம் போலி கணக்குகள் தொடர்பான விபரங்களை உரிய முறையில் வழங்காத காரணத்தினால் இந்த கொடுக்கல் வாங்கலை முன்னெடுக்க முடியவில்லை என மாஸ் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது

எவ்வாறெனினும், குறித்த சட்ட ஆலோசனை நிறுவனம் இந்த விடயம் பற்றி அதிகாரபூர்வமாக எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.