இலங்கை மக்கள் குறித்து பாப்பரசர் விடுத்த கோரிக்கை!

0
410
FILE -- Pope Francis attends his weekly general audience in St. Peter's Square at the Vatican, Wednesday, Jan. 22, 2014. The Vatican’s sprawling financial trial may not have produced any convictions yet or any new smoking guns. But recent testimony in May 2022 has provided plenty of insights into how the Vatican operates. (AP Photo/Alessandra Tarantino, File)

இலங்கையில் ஏழைகளின் அழுகையைப் புறக்கணிக்க வேண்டாம் என்று அதிகாரம் உள்ளவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் (Pope Francis) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் (Pope Francis) ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வரும் இலங்கை மக்களின் துக்கத்தில் என்னை இணைத்துக்கொள்கின்றேன். நாட்டின் ஆயர்களுடன் சேர்ந்து, அமைதிக்கான எனது வேண்டுகோளை நான் புதுப்பிக்கின்றேன்.

ஏழைகளின் அழுகையைப் புறக்கணிக்க வேண்டாம் என அதிகாரம் உள்ளவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் (Pope Francis) குறிப்பிட்டுள்ளார்.