இன்று முதல் ஆரம்பிக்கும் எரிவாயு விநியோகம்; விலை அதிகரிப்பு…

0
97

எரிவாயு சிலிண்டர் இன்று முதல் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பில் 12 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 4,910 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதிக விலைக்கு பிற தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு நுகர்வோரிடம் அந்த நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்றும், நாளையும் கொழும்பு உட்பட சன நெரிசல்  அதிமாக உள்ள பகுதிகளில் லிட்ரோ எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 13 ஆம் திகதி முதல் ஏனைய பகுதிகளுக்கும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும்.

எரிவாயு விநியோக நடவடிக்கையில் இராணுவம், பொலிஸார் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்பதுடன் எரிவாயு விநியோகத்தை சிறந்த முறையில் முன்னெடுக்க பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என லிட்ரோ நிறுவனம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.