சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 67 பேர் கைது

0
63

மட்டக்களப்பு – வாழைச்சேனை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 67 பேர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 11 சிறுவர்களும் 6 பெண்களும் அடங்குகின்றனர்.கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் படகு ஓட்டுநரும் மக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்ட முகவரும் தவிர்ந்த ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.