இந்தியா உட்பட 5 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் நீக்கம்! – ஜெலென்ஸ்கி

0
209

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் பதவி நீக்கப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அறிவித்துள்ளார்.

இந்தியா, ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் உள்ள தூதர்களை பதவி நீக்கம் செய்வதாக உக்ரைன் அதிபரின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் தூதர்களின் பதவி நீக்கத்திற்கான காரணம் குறித்தும் அவர்களுக்கு புதிய பணிகள் வழங்கப்படுவது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.