கோத்தபாய இராணுவ தலைமையகத்திற்கு இடமாற்றம்! – இந்திய ஊடகங்கள்

0
615

ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தை கோடிட்டு இந்திய செய்திச்சேவை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அதிகரிக்கும் பதவி விலகல் அறிவிப்புக்கள்

இராணுவ தலைமையகத்துக்கு மாற்றப்பட்ட கோட்டாபய! - இந்திய ஊடகம் | Gotapaya Transferred To The Army Headquarters

முன்னதாக போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர் தாம் எதிர்வரும் 13ஆம் திகதியன்று பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவி;த்திருந்தார்.

அத்துடன் இலங்கையில் நெருக்கடி நிலை மோசமடைந்ததையடுத்து தாம் பதவி விலகத்தயாராக இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அறிவித்தார்.

இதனையடுத்து பிரதமரின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து பலரும் தற்போது தமது பதவி விலகலை அறிவித்து வருகின்றனர்.