நன்றி அதிபரே; கோட்டாபய வீட்டில் இருந்து வீடியோவை வெளியிட்ட இலங்கையர்

0
256

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷேவின் வீட்டிலிருந்த மெத்தையில் படுத்துக்கொண்டு அவருக்கே நன்றி தெரிவித்து போராட்டக்காரர் வெளியிட்டுள்ள வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் ராஜபக்‌ஷேவின் வீடுகள் அவரது பெற்றோரின் கல்லறைகள் சொத்துக்களை தீக்கிரையாக்கினர். மேலும் அவரது கட்சி அமைச்சர்களின் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷேவுக்கு எதிரான போராட்டங்களும் வீரியமடைந்து வந்தன. இந்த நிலையில் அதிபர் மாளிகைக்குள் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்த நீச்சல் குளம், படுக்கை அறை, சமையல் சூடம் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று மகிழும் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகின.

பொதுமக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றப்போவதை முன் கூட்டியே தெரிந்துகொண்ட கோட்டாபய ராஜபக்‌ஷே அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்‌ஷே வீட்டின் நீச்சல் குளம், குளியலறையில் போராட்டக்காரர்கள் குளிக்கும் வீடியோக்கள், ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோக்கள், சமையலறைக்குள் புகுந்து சாப்பிடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

அதேபோல் கோட்டாபயாவின் கட்டில் மெத்தையில் படித்திருந்த நபர், “நன்றி அதிபரே, நாங்கள் உங்கள் மெத்தையில் படுத்துள்ளேன்.” என்று பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார்.