பிரதமர் இல்லம் தீக்கிரை – சந்திரிக்கா உட்பட பலர் கண்டனம்

0
453

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு 5வது லேனில் உள்ள தனியார் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டதற்கு முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா உட்பட பல அரசியல்வாதிகள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் தமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

சந்திரிக்கா கண்டனம்

“பிரதமர் ரணில் அவர்களின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதற்கு எனது வன்மையான கண்டனம்” என்று சந்திரிக்கா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஒரு மோசமான அரசாங்கத்தை அனுப்பிவிட்டு, சாத்தியமான, மக்கள் அரசாங்கத்தை நிறுவுவதற்கான இலக்கை அடைய அரகலயாவுக்கு வன்முறை தேவையில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

எரான் விக்ரமரத்ன கண்டனம்

இதேவேளை, பிரதமரின் இல்லம் மீதான தாக்குதலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்த வன்முறைச் செயல்கள் சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்திற்கான அழைப்பை பிரதிபலிக்கவில்லை!” என அவர் ட்வீட் செய்துள்ளார்.

நாலக கொடஹேவா

நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவாவும் பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்ற வன்முறைச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சனத் ஜயசூரிய மற்றும் மஹேல ஜயவர்தன 

முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர்களான சனத் ஜயசூரிய மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரும் பிரதமரின் இல்லம் எரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. இந்த செயலை முழு மனதுடன் கண்டிக்கவும்…” என மஹேல ட்வீட் செய்துள்ளார்.

“அரசியல் ரீதியாக நாங்கள் பிரதமருடன் உடன்படவில்லை, அவருடைய வீடு றோயல் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இது தவறு தயவு செய்து அமைதியாக இருங்கள் என சனத் ஜெயசூர்யா ட்வீட் செய்துள்ளார்.