முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா சற்றுமுன்னர் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தம்மிக்க பெரேரா கடந்த 24 மணித்தியாலங்களில் தனது இராஜினாமாவை அறிவித்த ஐந்தாவது அமைச்சராவார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஏற்பட்ட தேசியப் பட்டியல் வெற்றிடத்துக்கு தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டிருந்தார்.
பாதுகாப்பு அமைச்சு
அதன் பின்னர் அவர் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்ட மிக முக்கியமான நிறுவனங்களும் அவரது அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.
அமைச்சர்கள் இராஜினாமா

விவசாய அமைச்சரும் வனஜீவராசிகள் அமைச்சருமான மஹிந்த அமரவீர இன்று தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
நேற்று (09) இலங்கைக்கு வந்த யூரியா உரத்தின் இருப்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் இன்று (10) காலை பதவி விலகினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நேற்றைய தினம் ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் தமது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்தனர்.
