மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வீதி, சங்கானை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சங்கானை பகுதியை சேர்ந்த கந்தையா அன்னம்மா (வயது 81) என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்பு
குறித்த பெண் நரம்பு தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் என்றும் “நான் உங்களுக்கு தொந்தரவாக இருப்பதற்கு விரும்பவில்லை” என்றும் உறவினர்களுக்கு கூறியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலமானது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.