இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் மக்களுடன் கைகோர்த்த ராணுவ வீரர்

0
202

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக  கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தில் இராணுவ வீரர் ஒருவரும் போராட்டகளத்தில் மக்களுடன் கைகோர்த்துள்ளார்.

பொலிஸ் தடைகளை மீறி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலை ஆர்ப்பாட்டகார்கள் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான போராட்ட களத்தில் மக்களுடன் கைகோர்த்த இராணுவ வீரர் | Army Soldier Who Joined Hands With People

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆதரவு வழங்கியுள்ளார்.

மகரமவில் இருந்து காலி முகத்திடல் நோக்கி செல்லும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்லும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் குறித்த பொலிஸ் அதிகாரி செயற்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் அதிகாரி தனது பொலிஸ் இலட்சினை பொறித்த தலைக்கவசத்தை தூக்கி எரிந்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள நிலையில் இராணுவ வீரர் ஒருவரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Gallery

 Gallery