அமெரிக்க பெண்கள் பில்லியனர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்!

0
198

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள அமெரிக்காவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் ஐந்து இந்திய வம்சாவளி பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெயஸ்ரீ உல்லால் 15வது இடத்தினை பிடித்துள்ளார். சின்டெல்லின் இணை நிறுவனரான நீரஜா சேத்தி 24வது இடத்தை பிடித்துள்ளார்.

நேஹா நர்கடே, கன்ஃப்ளூயண்ட்டின் இணை நிறுவனர் 57வது இடம் பிடித்துள்ளார். இந்திரா நூயி, பெப்சிகோவின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி 85வது இடத்தில் உள்ளார். ரேஷ்மா ஷெட்டி, ஜிகோ பயோவொர்க்ஸின் இணை நிறுவனர் 97வது இடத்திலும் இடம் பெற்றுள்ளார்.

தற்போது 61 வயதாகும் ஜெயஸ்ரீ உல்லால் லண்டனில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர். இவர் போர்ப்ஸ் பத்திரிகை தற்போது வெளியிட்டுள்ள அமெரிக்காவின் கோடீஸ்வர பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 1.9 பில்லியன் டொலர்கள் என தெரியவந்துள்ளது.

1 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் நீரஜா சேத்தி 24வது இடத்தில் உள்ளார். நீரஜா சேத்தி சின்டெல்லின் இணை நிறுவனராக உள்ளார். அவர் 1980ம் ஆண்டு வெறும் 2,000 டொலர் முதலீட்டில் தனது கணவர் பாரத் தேசாய் உடன் இணைந்து சின்டெல்லை நிறுவியுள்ளார்.

பெப்ஸிகோவின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நூயி 320 மில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 85வது இடத்தில் உள்ளார்.