ஜனாதிபதி மாளிகை மக்கள் வசம் ? நாட்டை விட்டு வெளியேறினாரா ஜனாதிபதி ?

0
72

கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளாராக என்ற சந்தேகம் தற்போது போராட்டக்காரர்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான நுழைவாயிலைக் கடந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததையடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதன்போது ஜனாதிபதி மாளிகைக்குள் ஜனாதிபதி இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு விசேட அதிரடிபடையினரின் படைவீரர்களும், இராணுவ வீரர்கள் பலரும் தமது பாதுகாப்பு கடமையில் இருந்து பின்வாங்கி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழிவிட்டு அகன்றுக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தள்ளார்.