சகல பாடசாலைகளுக்கும் அடுத்த வாரமும் விடுமுறை

0
63

நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு அடுத்த வாரமும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சில் கல்வி அமைச்சர் தலைமையில் , ஏனைய அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிபர் , ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை அடிப்படையாகக் கொண்டு நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் (11) எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.