அவமானப்படுத்திய G20 நாடுகள் – வெளியேறிய ரஷ்ய அமைச்சர்

0
69

இந்தோனேசியாவில் வைத்து நடைபெற்று வரும் G-20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில், வழக்கமாக எடுக்கப்படும் பாரம்பரிய குழு புகைப்படம் எடுக்க பல்வேறு உறுப்பு நாடுகள் மறுத்துவிட்டனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசிய தலைநகர் பாலியில் வைத்து 2022ம் ஆண்டுக்கான G-20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா, கனடா , பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இந்த சந்திப்பில் உலக அளவில் அளவில் வளர்ந்து வரும் பிரச்சனைகளான புவி வெப்பமயாதல், பணவிக்கம், உணவு தட்டுப்பாடு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் பாதியிலே வெளியேறிய ரஷ்ய அமைச்சர்
இந்தநிலையில் G-20 நாடுகளின் சந்திப்பின் போது மாநாட்டில் வழக்கமாக எடுக்கப்படும் பாரம்பரிய குழு புகைப்படத்தை எடுக்க பல்வேறு உறுப்பு நாடுகள் மறுத்துவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

உக்ரைனில் போர் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் இணைந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே, பாரம்பரிய குழு புகைப்படத்திற்கு பல உறுப்பு நாடுகள் மறுப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ மாநாட்டின் பாதியிலே ரஷ்யாவிற்கு கிளம்பிவிட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.