ஊரடங்கு உத்தரவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

0
396

பொலிஸ்மா அதிபர் தன்னிச்சையாக ஊரடங்கை பிறப்பித்தமை சட்டவிரோதமானது என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நடமாட்டத்திற்கான உரிமையை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தும் உத்தரவு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்ட பகுதியில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தப்பட்டால் அந்த பகுதிக்கான பொலிஸ் பொறுப்பதிகாரி நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மீறல்கள் குறித்து முறைப்பாடு இல்லாதவேளையில் பொலிஸ்மா அதிபர் சட்டவிரோதமான உத்தரவை பிறப்பித்துள்ளார்,இந்த உத்தரவி;ற்கான காரணத்தை பொலிஸ்மா அதிபர் பொதுமக்களிற்கு தெரிவிக்கவேண்டும்,என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான உத்தரவை பெற தவறியபின்னர் ஆர்ப்பாட்டங்களை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.