நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுத்த ஐநா மனித உரிமை ஆணையாளர் !!!

0
69

இலங்கையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் விடயத்தில் அதிகாரிகள் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வன்முறையை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை நாங்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறும் அத்தியாவசிய மருத்துவ மற்றும் மனிதாபிமான சேவைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பேச்சாளர் ரவீனா சம்டசானி தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆர்வலர்களிற்கும் பத்திரிகையாளர்களிற்கும் ஆர்ப்பாட்டங்களை அவதானித்து அறிக்கையிடுவதற்கான உரிமையுள்ளது ஆகவேஅவர்கள் தங்கள் கடமைகளை செய்யும் போது பாதுகாக்கப்படவேண்டும் தடுக்ககூடாது என்ற தெளிவான விளக்கத்தை படையினருக்குஅதிகாரிகள் வழங்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றறோம், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.