ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
66

கொழும்பு கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளை காயமடைந்த 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் இருந்து ஒன்று கூடிய மக்கள் காலிமுகத்திடலில் பெரும் அரச எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் போராட்டத்தை அடக்க பொலிஸார் அவ்வப்போது நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீரப்புகைப் பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டதில் ஈடுபட்டுள்ள மக்களும் பொலிஸாரின் தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு ஜனாதிபதி மாளிகையை நோக்கி நகர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.