மேற்கத்திய நாடுகளை கலாய்த்த அதிபர் புடின்!

0
345

உக்ரைனில் நடக்கும் போர் முடிவல்ல ஆரம்பம் தான் என்று கூறியுள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின் (Vladimir Putin) தைரியம் இருந்தால் மேற்கத்திய நாடுகள் தன்னை ஜெயித்துக் காட்டட்டும் என சவால் விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

திடீரென உக்ரைனுக்குள் ஊடுருவி, இரு தரப்பிலும் ஏராளமான உயிர் பலியும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ள நிலையிலும், ரஷ்யா உக்ரைனில் இப்போதுதான் போரைத் துவக்கியுள்ளது, இன்னும் நிறைய இருக்கிறது என புடின் (Vladimir Putin) கூறியுள்ளார்.

போர் நீண்டுகொண்டே செல்வதால், சமாதானத்துக்கான வாய்ப்பு குறைந்துகொண்டே வருவதாக தெரிவித்த அவர், மேற்கத்திய நாடுகள் நம்மை போர்க்களத்தில் வெல்ல விரும்புகின்றன என்று கேள்விப்படுகிறோம், நாம் என்ன சொல்வது, முடிந்தால் முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

மேற்கத்திய நாடுகளை கலாய்த்த அதிபர் புடின்! | President Putin Upset The Western Countries

கடைசி உக்ரைனியர் உயிரிழக்கும்வரை போரிட மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன என்று பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம்.

இது உக்ரைனியர்களுக்குத்தான் சோகமான விடயம். ஆனால், எல்லாமே அதை நோக்கித்தான் செல்வது போல் தோன்றுகிறது என புடின் (Vladimir Putin) கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.