அரசுக்கு எதிராக கொழும்பில் திரண்ட ஆயிரக்கணக்கான பிக்குகள்!

0
300

இலங்கையை நெருக்கடியில் தள்ளி மக்களின் இன்றைய அவலநிலைக்கு காரணமான அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பிக்குகள், கிறிஸ்தவ மதகுருமார்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர். ஒன்பதாம் திகதி சுற்றிவளைப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள பல அமைப்புக்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.