அமெரிக்காவில் பச்சை நிறத்தில் தோன்றிய வானம்!

0
632

அமெரிக்காவின் தெற்கு டகோடா மாகாணத்தில் சூறாவளிக் காற்றில் வானம் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது.

தண்ணீர் நிறைந்து காணப்படும் மேகங்களில், நீல நிற ஒளி ஊடுருவும் போது இது போன்ற வான் நிகழ்வு ஏற்படும் என வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீர் நிறைந்த மேகங்களுக்குள் ஊடுருவும் நீல வர்ண ஒளி, சூரியனின் சிவப்பு கதிர்வீச்சுடன் கலந்து வானம் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கும் காட்சி இணையத்தில் அதிக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.