கனடாவில் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த தமிழ் பெண் வீட்டுக்காவல்!

0
392

கனடாவில் ஐந்து குழந்தைகளை அறைந்து மண்டியிட்ட செய்து இழுத்துச் சென்ற குற்றத்தை ஒப்புக் கொண்ட முன்னாள் தினப்பராமரிப்பு ஊழியரான தமிழ் பெண்ணுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படவில்லை.

தற்போது 52 வயதாகும் மாக்டலீன் வசந்தகுமார், மேப்பிள் அவென்யூவில் உள்ள பிரைட்பாத் மேப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஒன்ட், மில்டனில் உள்ள BrightPath Early Learning Centre இல் மாக்டலீன் வசந்தகுமார் குழந்தைகளை அறைவது மண்டியிட செய்வது, அவர்களின் தலைமுடியை இழுப்பது, காதுகளை முறுக்குவது மற்றும் தரையில் இழுத்துச் செல்வது போன்றவற்ற குற்றங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காணொளிகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழன் அன்று மில்டன் நீதிமன்றத்தில் ஐந்து தாக்குதல் வழக்குகளில் மாக்டலீன் வசந்தகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கனடாவில் குழந்தைகளை கொடுமைப்படுத்திய   தமிழ்ப் பெண்ணுக்கு  சிறை! | Tamil Woman Who Abused Children In Canada Jailed

15 மாத நிபந்தனையுடன் கூடிய தண்டனை இதனையடுத்து குற்றவாளிக்கு சமூகத்தில் அனுபவிக்க 15 மாத நிபந்தனையுடன் கூடிய தண்டனையை நீதிபதி வழங்கியதுடன் முதல் ஏழு மாதங்கள் வீட்டுக் காவலில் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பெண்ணுக்கு போதுமான தண்டனை வழங்கப்படவில்லையென பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் தாயார் தெரிவித்ததுடன் இது நியாயமில்லை. நான் தேடிக்கொண்டிருந்த நீதி இதுவல்ல என்று உணர்கிறேன் – இவர்கள் குழந்தைகள்” என்று அவர் கூறினார். மாக்டலீன் வசந்தகுமார் நிச்சயம் சிறைக்குச் செல்லத் தகுதியானவள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோராகிய எங்களுக்கும் அவள் ஏற்படுத்திய வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நாம் எப்படி வேதனைப்பட்டோமோ அப்படியே அந்த பெண்ணும் கஷ்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில் இரண்டு முன்னாள் ஊழியர்கள் மையத்தில் தனது குழந்தையைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்ட பின்னர் இரண்டு குழந்தைகளின் தாய் பேசிய போது ஏறக்குறைய இரண்டு வயதாக இருந்த தனது மகனை உதைத்து, தாக்கி, மண்டியிட செய்து, இழுத்துச் செல்லும் காணொளிகளை காவல் நிலையத்தில் பார்த்ததாக அவர் கூறுகிறார்.

கனடாவில் குழந்தைகளை கொடுமைப்படுத்திய   தமிழ்ப் பெண்ணுக்கு  சிறை! | Tamil Woman Who Abused Children In Canada Jailed

அதேசமயம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஹால்டன் பிராந்திய பொலிஸ் சேவையின் விசாரணையின் பின்னர் இரு தொழிலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. வசந்தகுமாரின் குற்றங்கள் அனைத்தும் 2020 இல் நடந்தன. அவர் மீது செப்டம்பர் 29, 2021 அன்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும் 6 தாக்குதல்களை எதிர்கொண்ட 22 வயது பெண் மீதான வழக்கு இன்னும் நீதிமன்றங்களில் இருக்கின்றது.

குற்றச்சாட்டுகளின் போது பிரைட்பாத் கிட்ஸ் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகவும் குழந்தைகள் உதவி சங்கம் (CAS) மற்றும் ஹால்டன் பொலிஸாரின் விசாரணைகளை ஆதரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளிடம் தவறாக நடத்துதல் அல்லது இரக்கமற்ற நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் எங்கள் எந்த மையத்திலும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்படாது என நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.