எரிபொருளை 200 ரூபாய்க்கும் குறைவாக வழங்க முடியும்!

0
609

ம்க்களுக்கு ஒரு லீட்டர் எரிபொருளை 200 ரூபாய்க்கும் குறைவாக வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் கோப் குழு முன்னிலையில் அவர் நேற்று மீண்டும் வலியுறுத்தினார். பெற்றோலியக் கூட்டுதாபனம், இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்கும்போது பிரச்சினையொன்று உள்ளமை குறித்து தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அது தொடர்பாக ஆராய்ந்தபோது, குறித்த அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள சூத்திரமானது, எந்தவித அடிப்படை தன்மையும் இல்லாமல் உள்ளதோடு அதற்கமைய விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

எரிபொருளை 200 ரூபாய்க்கும் குறைவாக வழங்க முடியும்! | Fuel Can Be Delivered For Less Than200 Rupees

அதற்கமைய, கடந்த இரண்டு மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கான கட்டணம் மற்றும் அதற்கான வரி என்பன தொடர்பாக தாம் ஆராய்ந்துள்ளதாகவும் அவற்றுக்கு இடையில் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையான வித்தியாசம் காணப்படுவதாகவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.