ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த பிரேசில் மாடல் அழகி!

0
228

உக்ரைன் மீது ரஷ்யா 133 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வருகின்றது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி தலிதா டோ வாலே ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற 39 வயதான அவர் கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்த போது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்துள்ளார்.

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ்க்கு எதிராக போரிட்டு அதனை தனது யூடியூப் சேனலில் ஆவணப்படுத்திய தலிதா டோ வாலே கடந்த 3 வாரங்களாக ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாகவும் காணொளி வெளியிட்டு வந்துள்ளார்.