இலங்கையில் 80 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை

0
502

பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் 80 பாதாள உலக குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து சேர்ப்போர் தொடர்பில் விசாரணை செய்யும் பிரிவினரால் இதுதொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த 80 பேரில் பலரும் நாட்டினை விட்டு வெளியேறி தற்போது வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் இவர்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து சேர்ப்போர் தொடர்பில் விசாரணை செய்யும் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 32 குற்றவாளிகளின் சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு முடக்கப்பட்டுள்ள அதிகளவான சொத்துக்கள் தெமட்டகொட சமிந்த என்ற குற்றவாளிக்கு சொந்தமானது எனவும் அவருக்கு 600 மில்லியனுக்கும் அதிகமான சொத்து இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

பாதாள உலக போதைப்பொருள் வியாபாரிகளின் சுமார் 100 கோடி பெறுமதியான சொத்துக்கள் இதுவரையான விசாரணைகள் ஊடாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எதிர்காலத்தில் அந்த சொத்துக்களையும் முடக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து சேர்ப்போர் தொடர்பில் விசாரணை செய்யும் பிரிவு தெரிவித்துள்ளது.  

இலங்கையில் 80 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை | Action To Freeze Assets Of80 People