நாட்டின் பிரதமராக செயல்படுங்கள்; மிஸ்டர் பீன் போல் செயற்பட வேண்டாம்!

0
220

நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரத்திற்கு வந்ததாக கூறும் பிரதமர் ரணில் பொறுப்புள்ள நாட்டின் பிரதமராக மக்களின் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறிய மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித ஹேரத் மாறாக மிஸ்டர் பீன் போன்று செயற்பட வேண்டாம் எனவும் சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமரிடமான கேள்வி நேரத்தின் போது விஜித்த ஹேரத் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன் எதிர்வரும் 23ஆம் திகதி எரிபொருள் கப்பல் வருவதாக அமைச்சர்கள் இந்த சபையில் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது அந்த கப்பல் வருவது தொடர்பில் எந்த நம்பிக்கையும் இல்லை என்றும், நாடாளுமன்றத்தை பிழையாக வழிநடத்திய அமைச்சர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் அதற்கு பதிலளித்த பிரதமர்,அரசாங்கத்தை பொறுப்பேற்கின்றீர்களா இல்லையா என்பதற்கு மாத்திரம் பதில்கூறுங்கள் என காட்டமாக கூறிய ரணில், உங்களின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்பதில்லை என தெரிவித்தார் ஆனால் நீங்கள் பொறுப்பேற்பதாக கூறினீர்கள் இந்த இரண்டில் ஒன்றை கூறுங்கள் என்றார்.

நாட்டின் பிரதமராக செயல்படுங்கள்;  மிஸ்டர் பீன் போன்று செயற்பட வேண்டாம்! | Act As Prime Minister Of The Country

அதற்கு பதிலளித்த விஜித ஹேரத் , மிஸ்டர் பீன் போன்று செயற்படாது பொறுப்புள்ள பிரதமராக மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கையை கூறுங்கள். மிஸ்டர் பீன் பாேன்று செயற்படுவதாக இருந்தால் எதிர்க்கட்சிக்கு வந்து அமர்ந்துகொள்ளுங்கள் என்றார்.

அதோடு நீங்கள் தற்போது நாட்டின் பொறுப்புமிக்க பிரதமர் அதனால் மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் எனவும் அவர் பிரதமை நோக்கி சபையில் கூறினார்.