இலங்கையில் பெட்ரோல் வாங்க வரிசையில் நிற்கும் மாடு! வைரலாகும் புகைப்படம்

0
270

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர்.

இந்த நிலையில், 50 பசு மாடுகளை வைத்து பால் விற்பனை செய்யும் விவசாயி ஒருவர் கால் நடைகளுக்கான வேலைகளால் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்க முடியாமல் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனது பசுமாடு ஒன்றை எரிபொருள் வரிசையில் கட்டி வைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் பெற்றோல் வாங்க வரிசையில் நின்ற பசு மாடு! வைரலாகும் புகைப்படம் | A Cow Standing In Line To Buy Petrol In Sri Lanka

இந்த சம்பவம் நேற்றைய தினம் (06-07-2022) தம்புள்ளையில் இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை அத்துபாராய பிரதேசத்தை சேர்ந்த ஆர்.எம்.ரத்நாயக்க என்பவர் இவர் தனது பசு மாட்டின் உடலில் தனது மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை எழுதி மோட்டார் சைக்கிள் வரிசையில் மாட்டினை கட்டி விட்டு சென்றுள்ளார்.

50 பசு மாடுகள் உள்ளதால் பெற்றோல் எடுக்க பல நாட்களாக வரிசையில் காத்திருந்தும் பெற்றோல் கிடைக்காமல் நாளாந்தம் வேலைகளை செய்துவிட்டு வந்து வரிசையில் நிற்க முடியாத நிலை.

பல சமயங்களில் மோட்டார் சைக்கிளை வரிசையில் விட்டுவிட்டு மாட்டு வேலைகளை முடித்துவிட்டு திரும்பும் போது மற்ற குழுக்கள் வரிசையில் காத்திருந்த போது மீண்டும் முன்னோக்கி செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில், வரிசையில் அவர் தன்னிடம் உள்ள 50 மாடுகளில் ஒன்றுக்கு உணவு தண்ணீர் கொடுத்துவிட்டு வீதியில் உள்ள மின் கம்பத்தில் கட்டிவிட்டு தனது வேலைகளுக்காக சென்றுள்ளார்.  

இலங்கையில் பெற்றோல் வாங்க வரிசையில் நின்ற பசு மாடு! வைரலாகும் புகைப்படம் | A Cow Standing In Line To Buy Petrol In Sri Lanka