கணவரின் பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு தாரை வார்த்த மனைவி: நையப்புடைத்த கணவன்!

0
383

யாழில் கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு மனைவி கொடுத்தமையால் கணவரின் தாக்குதலுக்கு இலக்கான மனைவி தலையில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ் வலிகாமம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நாட்டில் எரிபொருளுக்கு கட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருந்து கணவர் 05 லிற்றர் பெற்றோலை வாங்கி வீட்டில் வைத்துள்ளார்.

யாழில் கணவரின் பெற்றோலை  அலுவலக அதிகாரிக்கு தாரை வார்த்த மனைவி;  ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில்! | Wife Who Attacked Her Husband S Petroleum

இந்நிலையில் மனைவி அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரியை வீட்டிற்கு வரவழைத்து கணவனுக்கு தெரியாமல் சேமித்து வைத்திருந்த பெற்றோலை அந்த அதிகாரிக்கு கொடுத்துள்ளார்.

கணவர் வீட்டில் வந்து பார்க்கையில் 10 நாட்டகளாக சேமித்த வத்திருந்த பெட்ரோலை காணவில்லை என அதிர்ச்சியுற்றார். இது தொடர்பில் மனைவியிடம் விசாரிக்கும்போது மனைவி உண்மையை கூறிய நிலையில் ஆத்திரமடைந்த கணவர் மனைவியின் தலையில் கட்டையால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த அயலவர்கள் மனைவியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அதேவேளை கணவரும் யாழில் உள்ள முக்கிய அலுவலகம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது.