திருகோணமலையில் பெண்களால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Go Home கோட்டா!

0
191

திருகோணமலை – சேருநுவர RB -02 பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பதவி விலகுமாறு வலியுறுத்தி ‘ கோ ஹோம் கோட்டா ‘ போராட்டக்களம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டக்களம் நேற்று செவ்வாய்கிழமை (05-07-2022) ஆரம்பமானது.

இப் போராட்டக்களமானது சுழற்சிமுறையில் தொடர்ந்தும் செயற்படவுள்ளது. இதனை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது நேற்றையதினம் போராட்டக் களத்திற்கு முன்பாக சுலோகங்களை ஏந்தியவாறு ஜனாதிபதி பதவி விலகு பெற்றோல் இல்லை, டீசல் இல்லை, எரிவாயு இல்லை, கட்சி இனமத பேதமின்றி இலங்கையராய் ஒன்றிணைவோம் போன்ற கோசங்களை எழுப்பி போராட்டக்காரர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதையும் காணமுடிந்துள்ளது.