காதலியுடன் உறவில் ஈடுபட்ட இளைஞன் மாரடைப்பால் மரணம்!

0
501

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் காதலியுடன் உடல் உறவில் ஈடுபட்ட 28 வயது இளைஞன் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த அஜய் பர்தேகியின் (28), காதலி (23) மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். இருவரும் முகநூல் மூலம் நட்பாக பழக ஆரம்பித்து கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள்.

கடந்த ஞாயிறன்று (ஜூலை 3) இருவரும் நாக்பூரின் சனோர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு சென்று தனிமையில் இருந்திருக்கிறார்கள். எனினும் உள்ளே சென்ற அரை மணிநேரத்திலேயெ திடீரென காதலன் அஜய் மயங்கி வீழ்ந்ததால் அப்பெண் பதறியபடி வெளியே வந்து விடுதி ஊழியரிடம் அஜய்யின் நிலையை கூற அவரை உடனடியாக அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அங்கு மருத்துவர்கள் அஜய் பர்தேகியை பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொலிசார் விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள்.

காதலியுடன்  உறவில் ஈடுபட்ட இளைஞன் மாரடைப்பால் மரணம்! மருத்துவர்கள் கூறுவது என்ன | Relationship Girlfriend Died Of A Heart Attack

அதன்படி, அஜய்யின் காதலியை விசாரித்ததில் உடலுறவு கொள்ளும்போது அவர் திடீரென மயங்கி வீழ்ந்துவிட்டார் எனவும் அவர்களது காதலுக்கு இருதரப்பும் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்ததாகவும் கூறியுள்ளார். அதேவேளை அஜய்க்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் அஜய் எந்த சிகிச்சையிலும் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ள பொலிஸார் அவரது இறப்பு திடீர் மாரடைப்பாகத்தான் இருக்கும் என சந்தேகிக்கிறார்கள்.

அதேவேளை உடலுறவின் போது மாரடைப்பு ஏற்படுவது அரிதானதல்ல என இருதயநோய் நிபுணரான மருத்துவர் ஆனந்த் சஞ்சேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ரத்தக்குழாய் சார்ந்த தமனி நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாத போது உடலுறவு போன்ற கடுமையான நடவடிக்கைகளின் போது மரணம் நிகழலாம் என டாக்டர் சஞ்சேதி தெரிவித்துள்ளார்.

காதலியுடன்  உறவில் ஈடுபட்ட இளைஞன் மாரடைப்பால் மரணம்! மருத்துவர்கள் கூறுவது என்ன | Relationship Girlfriend Died Of A Heart Attack

ஏனெனில், உடலுறவு கொள்ளும்போதும் சரி ஏனைய கடுமையான பணிகளில் ஈடுபடும் போதும் சரி இதயத்திற்கு அதிக அளவு இரத்தமும் ஒக்ஸிஜனும் தேவைப்படுகிறது. அப்போது அதன் தேவை பூர்த்தி செய்யப்படாவிடில் மோசமான விளைவுகளும் சில நேரங்களில் மரணமும் நிகழும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே இதுபோன்ற விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க வழக்கமான வாழ்க்கை முறையை மாற்றி முறையாக உண்டு, உறங்கி, பணியாற்றி, உடற் பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியமாக தினசரி வாழ்க்கையை கடத்துவதால் இதுபோன்ற பாதிப்புகள் வராது என நிபுணர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.