பிரிட்டனில் 200 ஆண்டுகள் பழமையான ஓவியத்தில் கைகளை ஒட்டி நூதன போராட்டம்!

0
180

சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஓவியமொன்றில் தங்களது கைகளை ஒட்டிக்கொண்டு நூதன போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தேசிய ஓவிய அருங்காட்சியகத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

காலநிலை பாதிப்பினை எதிர்த்து போராட்டங்களை நடாத்தி வரும் இருவர் இவ்வாறு ஓவியத்துடன் பசை பூசப்பட்ட தங்களது கைகளை ஒட்டிக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு பழமையான ஓவியத்தில் தங்களது கைகளை ஒட்டி எதிர்ப்பை வெளியிட்ட இரண்டு காலநிலை மாற்ற செயற்பாட்டாளர்களையும் லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எண்ணெய் சாயத்தினால் நிறந்தீட்டப்பட்ட இந்த ஓவியத்தின் வெளிச் சட்டத்தில் போராட்டக்காரர்கள் இவ்வாறு தங்களது கைகளை ஒட்டி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

“‘The Hay Wain” என்று அழைக்கப்படும் இந்த ஓவியத்தின் வெளிச் சட்டத்தில் சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்விற்கு அனுமதி வழங்கப்படக் கூடாது என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.