காலி முகத்திடலில் பதுங்கியிருந்த நபரை பொலிஸார் கைது!

0
258

ரந்தபுர மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பாலியல் துஷ்பிரயோகம் வழக்கின் பிரதான சந்தேக நபர் காலி முகத்திடலில் பதுங்கியிருந்த போது கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால் சந்தேக நபருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் காலிமுகத்திடலில் இரு மாதங்களாகத் தங்கியிருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி முகத்திடலில் பதுங்கியிருந்த நபரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்! | Abuse Case Police Arrested The Man Galle Protest

சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை ஜூலை 12ஆம் திகதி இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூலை 22ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.