அந்த நபரை உதைக்கவில்லை! ராணுவ அதிகாரி விராஜ்

0
513

குருணாகல், யக்கஹபிட்டிய IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மற்றும் சமூகவலைத் தளங்களில் பரவிவரும் காணொளி தொடர்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  

இச் சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி தெரிவித்தது,

தான் நபர் ஒருவர் மீது காலால் உதைத்து தாக்கியபோதும் அது அந் நபரின் உடம்பில் படவில்லை என குருணாகல் நகர பகுதியின் இராணுவ லெப்டினன்ட் கேர்ணல் தர கட்டளை அதிகாரியான விராஜ் குமாரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

தான் குருணாகல் பகுதியில் சேவையாற்றும் நற்பெயர்மிக்க இராணுவ அதிகாரி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே பாதாள உலகக் கோஷ்டியினர் ஒன்று கூடியுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய தாம் அங்கு சென்றதாக கூறினார்.

தான் காலால் உதத்தது உண்மையே எனினும் அந்த தாக்குதல் குறித்த சிவியன் மேல் விழவில்லை குறித்த நபரிடமே அது தொடர்பில் கேட்டுப்பார்க்க முடியும் என தெரிவித்தார்.

எவ்வாறாயினும் குறித்த இராணுவ அதிகாரி தொடர்பில் நிறுவன மட்டத்திலான உடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.